Description
கனிமப் படிவங்கள் மிகவும் மாறுபட்ட சூழலில் பல்வேறு வகையான உருவமைப்புடன் நில ஆழப் பகுதியிலோ அல்லது வெளிக்காணும் நிலப்பரப்பிலோ உண்டாகின்றன. இவ்வாறு கிடைக்கும் கனிமப் படிவங்கள் பொருளாதாரம், மற்றும் தொழில் துறை முன்னேற்றத்திற்காக மனிதனுக்கு மிகவும் தேவைப்படுகின்றன என்று மிகவும் நன்றாகத் தெரியும். கனிமச் செல்வத்தை முதலில் கண்டுபிடித்து எடுத்த பின்னர் நான் அதனைப் பயன்படுத்த முடியும். ஞாலவியல் ஆராய்ச்சியைச் சார்ந்த கனிப் பொருள்களை முந்தித் தேடிக் கண்டுபிடிக்கும் சுனீம வேட்டைப் பயணங்களும், ஞாலவியல் சுற்றுவாக்களும், சாலை அமைத்தல், பாறையையும் மண்ணையும் தோண்டிச் சுரங்கம் அமைத்தல், கற்கிடங்குகளை வெட்டல் ஆகிய வேலைகளும் புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி அரிய பணி புரிகின்றனவாயினும் கனிமப்படிவைக் கண்டுபிடிக்கத் தனிப்பட்ட ஒருவருக்கு ஞால வியல் அடிப்படை அறிவும், திட நம்பிக்கையும், கூரிய நோக்கும் வேண்டும்.
Reviews
There are no reviews yet.