Description
உலக உத்தமர் மறைந்ததால் உள்ளம் நொந்து கிடக்கும் நாம், ஒருவருக்கொருவர் ஆறுதல் மொழி கூறிக்கொள்ளும் நிலையிலே இருக்கிறோம். ஒரு கிழமைக்கு மேலாகி விட்டது: இழி குணத்தான், மா நிலம் போற்றும் மகாத்மாவைக் கொலை செய்து முதல் உலகம் இன்றும் அழுதுகொண்டு தான் இருக்கிறது. அவருடைய மாண்புகளைப் பற்றிப் பேசாத நாடில்லை; எழுதாத ஏடில்லை. எங்கும் கலக்கம்-ஏக்கம்-எவருக்கும் தாங் கொணாத் துக்கம், அதை மாற்ற அவரைப் பற்றிப் பேச முனைகிறோம்.
Reviews
There are no reviews yet.