Description
அண்மையில் வர்த்தக வங்கியியலில் சித்தாந்த, நடைமுறைகளில் உலக முழுவதும் அமைதியான முறையில் ஒரு பெரும் புரட்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஊறிப்போன பழைய வழக்கங்களிலிருந்து மிக விலகிச் சென்று செயலாற்றலைக் காண்கிறோம். பல்வேறு நாடுகளின் அனுபவங்களைத் தொகுத்து அவை காட்டும் பொருளாதாரப் போக்குகளை ஒரு பொதுக் கோலத்தின் வெவ்வேறு இழைகளாகக் காண்பது சுவையாக இருக்கும். ஒரு நாட்டின் பொருளாதார அமைப்புக்கு முக்கிய உறுப்பாக மைய வங்கிகள் அமைவதால் அவை தோற்றும் புதுமைகள், செயல் முறைகள். பொருளாதாரக் கொள்கைகளில் நடத்தும் புதிய பரிசோதனைகள், மாறும் உலகுக்குத் தக்கவாறு தன் வேலைகளை மாற்றிக்கொள்ளும் இயல்பு ஆகியவை கூர்ந்த கவனிப்புக்குரியவை. வர்த்தக வங்கிகளின் மாறும் இயல்புகளும் அவற்றின் இயக்கங்களின் வேறுபாடுகளும் இப்புத்தகத்தில் அழுத்தந்திருத்தமாகக் கூறப்பட்டுள்ளன. அதோடு தனியார் வங்கிகளை நாட்டுடைமையாக்குவது பற்றி விரிவாக ஆராயப் பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.