Description
நாப்பது வருசங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இக்கடிதங்களை, இப்போது வாசித்துப்பார்க்கும்போது…. என்னவெல்லாமோ எண்ணங்கள் மனசில்த் தோன்றுகிறது.இக்கடிதங்களினால் நான் எவ்வாறு போஷிக்கப்பட்டு வளர்ந்தேன் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது. அடுத்து, அவனுடைய மனசு..இக்கடிதங்கள் வெளி உலகத்துக்கு வேடிக்கையாகத் தான் தோன்றும். எங்கள் இருவர் பெயர்களையும் நீக்கி விட்டு இதில் சில பகுதிகளை யாருக்கும் படிக்கக் கொடுத்தால், காதல்க் கடிதங்களா என்று கேட்பார்கள்!தூங்கி எழுந்ததும் காலைக் கடன்களை முடித்து. குளித்து விட்டு பூஜைக்கு உட்காருவது போல கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது அந்தப் பிராயத்தில்.
Reviews
There are no reviews yet.