Description
இந்த விஷயங்களிலிருந்து கதைக்கருக்கள் பிறந்தன. என் கற்பனா சக்தியும் வெளியீட்டு சக்தியும் கலைத்திறனும் உதவி அவை சிறுகதைகளாக வடிவம் பெற்றன. அந்த சிறுகதைகள் பன்னிரெண்டு – இருபத்தைந்து ஆண்டுக் காலத்தில் எழுதப்பட்டவை – கொண்ட தொகுதி இது. ‘வந்தே மாதரம்’ மில் ஆரம்பித்து ‘சத்யாக்ரகி’யில் முடிகிற இவை காந்தி கால ஏடுகள். எனக்கு எப்போதுமே ஒரு ஆசை. சென்று போனதை நினைத்துப் பார்க்கவேண்டும், இந்த நினைப்பிலே அந்த நாட்களுக்கே போய்விடவேண்டும், இந்த இரண்டுக்கும் மேலாக நமக்கு முன் வெகு சமீபத்தில் முத்திரை பதித்துச் சென்றிருக்கும் சமீபத்திய மரபு மறந்து போயேவிடாமல் இருக்க, இருந்த சுவடே தெரியாதுபோய்விடாமல் இருக்க, அது இன்னும் நம் கண்முன் அழியாத சித்திரமாக நிற்கச் செய்ய, முடிவாக நமது பிதுரார்ஜிதம் நமக்கு கிடைக்கும்படியாகச் செய்யவேண்டும் என்பதுதான் அது.
Reviews
There are no reviews yet.